தமிழகம்

ஆசிரியை ரம்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்! கொலைகாரன் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Summary:

Teacher ramya murder case accused hanging himself

சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்ட சம்பவம் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியை ரம்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம்தான். இந்நிலையில் ரம்யாவை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த ராஜசேகர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடலூர் குறிஞ்சி பாடியை சேர்ந்தவர் ரம்யா. இவர் அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தார். இந்நிலையில் ரம்யா மீது ஏற்பட்ட ஒருதலைகாதலால் நேற்று முன்தினம் ஆசிரியை ரம்யா கொலைசெய்யப்பட்டார்.

பள்ளி வகுப்பறைக்குள் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் ரம்யாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே ரம்யா உயிரிழந்தார். இதை கண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்நிலையில் ரம்யாவை கொலைசெய்தது அவரை ஒருதலையாக காதலித்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜசேகரை போலீசார் தேடிவந்தனர். இதனை தொடர்ந்து இன்று ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement