தமிழகம்

பிஞ்சுகுழந்தை என்று பாராமல் பிரம்பு முறிய, கொடூரமாக தாக்கிய ஆசிரியர்! பின்னர் நடந்த சற்றும் எதிர்பாராத விபரீதம்!

Summary:

teacher beat child in school

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மகள் முத்தரசி. முத்துச்செல்வன் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் முத்தரசி தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்து வருகிறார். 10 வயது நிறைந்த அவர் கூடங்குளத்தில் உள்ள புனித அன்னம்மாள் தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு ஆதிநாராயணன் என்பவர் வகுப்பாசிரியராக இருந்துள்ளார். அவர் வழக்கம்போல் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது மாணவி ஒருவரிடம் கேள்வி கேட்டுள்ளார்.  அதற்கு அவர் பதில் கூறாததால் ஆதிநாராயணன் பிஞ்சு குழந்தை என்று கூட பாராமல் பிரம்பால் கடுமையாக அடித்துள்ளார்.

அப்பொழுது பிரம்பு முறிந்து அருகில் அமர்ந்திருந்த சிறுமி முத்தரசியின் கண்ணில் பட்டுள்ளது. இதில் அவர் வலியால் அலறி துடித்துள்ளார்.மேலும் கண்ணிலிருந்து இரத்தம் வழிந்துள்ளது. இதனை தொடர்ந்து இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவியின் பார்வை குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் எதுவும் கூறப்படவில்லை. அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 இதற்கிடையில் மாணவியின் பாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் ஆதிநாராயணன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


Advertisement