குடிமகன்களுக்கு குஷியான செய்தி.! இன்றுமுதல் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை இயங்கும்.!

குடிமகன்களுக்கு குஷியான செய்தி.! இன்றுமுதல் டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணி வரை இயங்கும்.!


tasmak will open till night 10pm

தமிழகத்தில் கொரானா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மூடப்பட்டன. அதனை தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என கூறி டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடை வாங்கியதையடுத்து, மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கி வருகின்றன. காலை 10 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகள் இரவு 8 மணிக்குள் மூடப்பட்டு வந்தன. 

tasmac

இந்நிலையில்  தமிழகத்தில் நவம்பர் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் நவம்பர் 1ஆம் தேதி இன்று முதல் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என தெரிவித்துள்ளது.