நேரம் மாத்தியாச்சு!! டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு!! முழு விவரம் இதோ!

நேரம் மாத்தியாச்சு!! டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு!! முழு விவரம் இதோ!


Tasmac time changes due to corona lockdown

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பேரலை பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

அதன்படி தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு நடைமுறைகளுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. காய்கறி, மளிகைக்கடை, இறைச்சிக்கடை தொடங்கி அலுவலகம், பேருந்து பயணம் என பலவற்றிற்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9மணிக்கு மூடப்படும் டாஸ்மாக் கடைகள், இன்றுமுதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.