தமிழ்நாட்டில் சரக்கு வாங்கும் ஸ்பெயின் நாட்டினர்..! டாஸ்மாக் கடையில் முதல் இரு டோக்கன்களை பெற்று வரிசையில் நின்ற புகைப்படம்.!
தமிழ்நாட்டில் சரக்கு வாங்கும் ஸ்பெயின் நாட்டினர்..! டாஸ்மாக் கடையில் முதல் இரு டோக்கன்களை பெற்று வரிசையில் நின்ற புகைப்படம்.!

தமிழகத்தில் டோக்கன் வாங்கி முதல் ஆளாக டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்ற ஸ்பெய்ன் நாட்டை சேர்ந்த இருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்து வருகிறது.
தமிழகத்தில் இன்றுமுதல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு மதுக்கடைக்கு வரும் குடிமகன்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஸ்பெயின்நாட்டைச் சேர்ந்த கோர்சே, பெர்பைன் என்ற இருவர் முதல் இரு டோக்கன்களை பெற்று வரிசையில் நின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.