தமிழகம்

குடிமகன்கள் நாளைமுதல் மீண்டும் குடிக்கலாம்..! தமிழகத்தில் நாளை மதுக்கடைகள் மீண்டும் திறப்பு..! டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.!

Summary:

Tasmac reopen from may 16th in tamilnadu

நாளையில் இருந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க இருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது. தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் இரண்டு நாட்களுக்கு பிறகு உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து மீண்டும் மூடப்பட்டது.

மதுக்கடைகளை மீண்டும் திறக்க அனுமதிகோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை தற்காலிமாக தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நாளை முதல் சமூக இடைவெளியை கடைபிடித்து மதுபானங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement