முதல் நாளே சூடுபிடித்த மதுவிற்பனை..! நேற்றைய மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..? அடேங்கப்பா..!

முதல் நாளே சூடுபிடித்த மதுவிற்பனை..! நேற்றைய மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..? அடேங்கப்பா..!



tamilnadu-tasmac-collection-on-day-one-after-lockdown

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டநிலையில், முதல் நாளே தமிழகம் முழுவதும் சுமார் 163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மூன்றாம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. தமிழகத்தில் மே மாதம் 7 ஆம் தேதி திறக்கப்பட்ட மதுக்கடைகள் இரண்டு நாட்களுக்கு பிறகு உயர் நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டது.

tasmac

இதனை அடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து மீண்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி வாங்கியது. இந்நிலையில் நேற்றுமுதல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுவிற்பனை சூடுபிடித்தது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றநிலையில் நேற்று ஒரே நாளில் 163 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.