தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
நாட்டிலேயே 3வது இடத்திற்கு சென்றது தமிழகம்.! ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட எதிரொலி.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து 124 என்ற எண்ணிக்கையுடன் இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது தமிழகம்.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 1,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை நேற்று 50 ஆக இருந்த பாதிப்பு மாலையில் 67 ஆக உயர்ந்தது, இன்று மேலும் 57 பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.
முதலிடத்தில் கேரளாவும் (234 பேர்), 2வது இடத்தில் மஹாராஷ்டிராவும் (216 பேர்) உள்ளது. டெல்லி, கர்நாடகா மாநிலங்களைவிட பின்தங்கி இருந்த தமிழகம் இன்று நாளில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.