பாஜக தொண்டர்களால் தான் தாக்கப்பட்டது ஏன்? ஆட்டோ ஓட்டுநர் கதிர் தமிழிசையிடம் விளக்கம்!

பாஜக தொண்டர்களால் தான் தாக்கப்பட்டது ஏன்? ஆட்டோ ஓட்டுநர் கதிர் தமிழிசையிடம் விளக்கம்!



Tamilnadu BJP leader tamilisai met auto driver kathir

ஆட்டோ ஓட்டுநர் கதிர் என்பவர் கடந்த 16-ஆம் தேதி சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழிசையிடம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். கேள்வி கேட்டதால் பாஜாகாவினர் சிலர் ஆட்டோ ஓட்டுநர் கதிரை தாக்கியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் கதிருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது ஆதரவை தெரிவித்தனர் . இந்த செய்தி தீயாக பரவியதை அடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரையும், அவரது குடும்பத்தினரையும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் தமிழிசையிடம் கேள்விகேட்க முயன்றபோது பாஜகவினர் தன்னை தாக்கியது உண்மைதான் என ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார். தான் மது அருந்திவிட்டு கேள்வி கேட்க சென்றதாக கூறுவது தவறு என தெரிவித்துள்ள கதிர், பாஜகவினர் தாக்கியது தமிழிசைக்கு தெரியாது என்றும் தெரிவித்தார். தமிழிசை தன்னை வந்து சந்தித்தபோது பாஜகவினர் தாக்கியிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியதாகவும் ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.