தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?tamilnaadu-4-districts-not-affected-by-corono

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லை. 38 ஆவது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை இந்த புள்ளிவிவர கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்தியாவில் இதுவரை 4756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் முதலிடத்தில் மஹாராஷ்டிராவில் 868, இரண்டாமிடத்தில் உள்ள தமிழகத்தில் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

tamilnadu

இதில் தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னை மாவட்டத்தில் 113 பேரும் கோயம்புத்தூரில் 63 பேரும் திண்டுக்கல்லில் 45 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூர் மற்றும் அரியலூரில் தலா ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக அறிவிக்கப்பட்ட மயிலாடுதுறை தவிர மற்ற 37 மாவட்டங்களில் 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதுக்கோட்டை, தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை.