தமிழ் சினிமா பிரபலம் திடீர் மறைவு! வரிசையாக சோகத்தை சந்திக்கும் திரையுலகம்!

தமிழ் சினிமா பிரபலம் திடீர் மறைவு! வரிசையாக சோகத்தை சந்திக்கும் திரையுலகம்!



tamil-righter-pirabanjan-death

1995ஆம் ஆண்டு சாகித்திய அகடாமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சன்  புதுச்சேரியில் இன்று காலமானார்.

பிரபஞ்சன் ஏப்ரல் 27, 1945 அன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பட்டம் பெற்றார். தனது வாழ்க்கையை தஞ்சாவூரில் ஆசிரியராகத் தொடங்கினார்.

குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வாரப் பத்திரிக்கைகளில் பணிபுரிந்துள்ளார். இவரது முதல் சிறுகதை என்ன உலகமடா பரணி 1961ல் வெளியானது.

இதுவரை 46 புத்தகங்களுக்கும் அதிகமாக எழுதியுள்ளார். 1995ல் இவரது வரலாற்றுப் புதினம் வானம் வசப்படும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இப்பபுதினம் ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது. இவரது படைப்புகள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

புற்றுநோய் காரணமாக சொந்த ஊர் புதுச்சேரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பிரபஞ்சன், இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும், திரைத்துறை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.