தமிழகம் உலகம்

தமிழக ஊடகங்களால் கொரோனா வைரஸிலிருந்து தப்பவுள்ள தமிழர்! நன்றி கூறி உற்சாகத்துடன் வெளியிட்ட வீடியோ!

Summary:

tamil people rescue from japan ship by tamil media

மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜப்பானில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் நிறுவனத்தின் சுற்றுலா கப்பலில் பணியாற்றி வருகிறார். 3500 சுற்றுலா பயணிகளை கொண்ட இக்கப்பல் பல நாடுகளுக்கு சுற்றி வந்த நிலையில் இதில் 60 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அக்கப்பலில் உள்ளவர்கள்,  துறைமுகத்தில் இறக்கப்படாமல் 8 நாட்களாக கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ குழுவினர் கப்பலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அன்பழகன் வாட்ஸப்பில், இந்தியாவை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு உள்ளோம். கொரோனா வைரஸ் பாதிப்பில்லாத எங்களுக்கும் இந்த நோய் பரவி விடுமோ என்று பயமாக உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் எங்களை மீட்க முயற்சி எடுக்க வேண்டும் என்று பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 இந்நிலையில் இதனை கண்ட அவரது மனைவி மல்லிகா இதுதொடர்பாக அரசுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் இந்த தகவல் சமூகவலைத்தளங்களில பெருமளவில் பரவிய நிலையில் மத்திய அரசு இதுகுறித்து ஜப்பான் அரசிடம் பேசியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அன்பழகன் மீண்டும் தமிழருடைய பிரச்சினையை தமிழக ஊடகங்கள் விரைவாக கொண்டு சென்றுள்ளது. எங்களது நிறுவனம் எங்களை மீட்டு ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகிறது.எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் மிக்க நன்றி.விரைவில் ஊருக்கு வருவேன். உங்களை சந்திக்கிறேன் என்று வாட்ஸ் அப்பில் பேசி தனது குடும்பத்திற்கு அனுப்பியுள்ளார். 


Advertisement