பயிர்க்கடன் தள்ளுபடி.... முதல்வர் விஜய்யின் அடுத்த சர்ப்ரைஸ்! எதிர்பார்பில் அரசியல் வட்டாரம்!!!
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அமைச்சர்கள் உறுதி அளித்து வரும் நிலையில், அடுத்தகட்ட அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
ரூ.2,500 ஆக உயருமா?
மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான கேள்விகள் பேரவையில் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் அமைச்சர்கள், தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்து வருகின்றனர். இதனால் தொகை உயர்வு குறித்த அரசின் அடுத்த நகர்வை பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... சொன்னதை செய்யும் தவெக அரசு! ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை உயர்வு... வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
பயிர்க்கடன் அறிவிப்புக்கு பிறகு அதிகரித்த எதிர்பார்ப்பு
சமீபத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் கவனம் பெற்றது. இதையடுத்து, மகளிர் உரிமைத் தொகை தொடர்பாகவும் இதேபோன்ற ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் நேரடியாக அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வாறு அறிவிப்பு வந்தால், மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முடிவு கிடைக்கும் என பலரும் கருதுகின்றனர்.
முதலமைச்சரின் அறிவிப்பை எதிர்பார்க்கும் அரசியல் வட்டாரம்
இதுவரை அமைச்சர்கள் அளித்து வரும் உறுதிமொழிகளுக்கு மத்தியில், முதலமைச்சர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது. கூட்டத்தொடரின் அடுத்தடுத்த நாட்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.
எனினும், தொகை உயர்வு, நடைமுறைப்படுத்தப்படும் தேதி, கூடுதலாக பயன்பெற உள்ள பயனாளிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே முழுமையான தகவல் வெளியாகும். அதுவரை ரூ.2,500 உரிமைத் தொகை குறித்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் தொடர்ந்து நீடிக்கிறது.
இதையும் படிங்க: BREAKING : சற்று முன்.. மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2500...! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!!