நொடியில் நடந்த பயங்கரம்! இளம்பெண்ணுக்கு தோழனே செய்த துரோகம்! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!



jabalpur-restaurant-woman-stabbed-to-death

 

 

Lமத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பிரபல மஹ்பில் உணவகத்தில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்கான் என்ற பெண் உயிரிழந்த நிலையில், அவரை கொலை செய்ததாக பவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உணவு சமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு

முஸ்கானுக்கும் பவனுக்கும் இடையே உணவு சமைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முஸ்கான் உணவக மேலாளரிடம் பவன் குறித்து புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பவன், அவருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதையும் படிங்க: மோமோஸ் சாப்பிட்ட கொஞ்சம் நேரத்தில் வயிற்று வலி! இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு.... பள்ளி விடுதியில் நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்!!!

உணவகத்திற்குள்ளேயே கத்திக்குத்து

வாக்குவாதம் முற்றிய நிலையில், பவன் கத்தியால் முஸ்கானை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. உணவகத்திற்குள்ளேயே நடந்த இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த முஸ்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வெளியான சிசிடிவி காட்சிகள்

இதற்கிடையே, கொலை நடந்த விதம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காட்சிகள் மற்றும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஜபல்பூர் கொலை தொடர்பாக பவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: 1 இல்ல.. 2 இல்ல.. கருப்பையில் இருந்த 500 கட்டிகள்! 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்.... மறுபிறவி எடுத்த பெண்!!!