அம்மாவை கொலை செய்து வாட்ஸப்பில் போட்டோ அனுப்பிய மகன்.. கதறிய குடும்பம்.!
தாயை கொலை செய்து போட்டோவை மகன் வாட்சப்பில் அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.
பேராசிரியை:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், குமாரபுரம், ஜெயா நகரில் வசித்து வருபவர் அன்புமணி. இவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். இவரின் மனைவி ரேணுகா (வயது 62). இவர் ஓய்வுபெற்ற பேராசிரியை ஆவார். தம்பதிகளின் மூத்த மகன் சென்னையில் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆண் நண்பருக்காக இப்படியா? சிறை வளாகத்திலேயே பெண் போலீசின் ஷாக் செயல்..! லீக்கான வீடியோ.!
மனநல பாதிக்கப்பட்டவர்:
இரண்டாவது மகன் தங்கபாலன் (வயது 27) மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இதற்காக சிகிச்சையும் பெரு வருகிறார். இதனிடையே, நேற்று காலை நேரத்தில் அன்புமணி பள்ளத்தூரில் இருக்கும் கிராமத்தில் குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார். வீட்டில் ரேணுகா, தங்கபாலன் இருந்துள்ளனர்.
வாக்குவாதம்:
அச்சமயம், திடீரென தாய் - மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மகன் அம்மிக்கல்லை எடுத்து தாயை சரமாரியாக தாக்கி இருக்கிறார். இதனால் படுகாயமடைந்த ரேணுகா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தாயை கொலை செய்தபின் போட்டோவை சென்னையில் இருக்கும் அண்ணனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
விசாரணை:
இதனைக்கண்டு பதறிப்போன அவர், கதறியழுதபடி காவல்துறையினருக்கும், தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதன்பேரில் நேரில் சென்ற அதிகாரிகள் தாயின் உடல் அருகே இருந்த தங்கபாலனை கைது செய்தனர். மேலும், ரேணுகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.. எமனான காதல்..!