ஆண் நண்பருக்காக இப்படியா? சிறை வளாகத்திலேயே பெண் போலீசின் ஷாக் செயல்..! லீக்கான வீடியோ.! 



Bengaluru Woman Police Inspector’s Private Video Leaked; Shocking Prison Connection Under Investigation

சிறை வளாகத்தில் ரௌடி எடுத்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

வீடியோ லீக்: 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே, சமூக வலைத்தளத்தில் பெண் காவல்துறை அதிகாரியின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியது. அதாவது, அதிகாரி போனில் பேசிக்கொண்டே அவர் தனது ஆடைகளை கழற்றும் வீடியோ வெளியான நிலையில், பெண் அதிகாரி குறித்து விசாரணை நடத்தப்பட்டது.  

இதையும் படிங்க: தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்.. எமனான காதல்..! 

காவல் ஆய்வாளர்:

விசாரணையில், வீடியோவில் இடம்பெற்றுள்ளது கர்நாடக மாநில தொழில்துறை பாதுகாப்பு படைப்பிரிவில் இருக்கும் அதிகாரி என்பது உறுதியானது. இவர் காவல் ஆய்வாளர் பொறுப்பில் இருக்கிறார். இவர் கிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இந்தபோது, நண்பரான ரௌடி சாய்குமார் என்பவருடன் வீடியோ கால் பேசியபோது ஆடையை கழற்றியது உறுதி செய்யப்பட்டது. 

Crime news

புகார்: 

வீடியோ வைரலாகியபின் சாய்குமார் மீது பெண் காவல் ஆய்வாளர் புகார் அளித்துள்ளார். கடந்த 2024 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரௌடி சாய்குமாரும் பெண் காவல் ஆய்வாளரின் மீது லஞ்சம் பெற்று சிறைக்குள் தொலைபேசி, மதுபானம் அனுமதித்ததாக கூறி இருக்கிறார். லஞ்ச பணத்தில் வந்த மொபைலில் தான் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டருக்கு எதிராக புகார் அளித்த ரௌடி புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. போக்ஸோ வழக்கில் சிக்கியும் திருந்தாத ஓட்டுநர்..!