தமிழகம் Covid-19

விஷயம் தெரியுமா?? தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் கூட, இந்தமுறை இதற்கு தளர்வு வர போகுதாமே!!

Summary:

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும், தளர்வுக

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கடந்த பல வாரங்களாக முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்துவருவதால் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்பை விட தற்போது பாதிப்பு குறைந்திருந்தாலும், மேலும் கொரோனா பாதிப்பை குறைக்கும் விதமாக தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீட்டிக்க உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். அதேநேரம் இந்த முறை சற்று கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் மட்டும் நேரக் கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடைப்பயிற்சிக்கு அனுமதி, ஒருசில சிறுதொழில்கள் போன்றவற்றிக்கு இந்தமுறை அனுமதி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.


Advertisement