தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி.! மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்வு.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா உறுதி.! மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்வு.


Tamil Nadu current corono positive count

தமிழகத்தில் இன்று மேலும் 102 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 411 ஆக உயர்ந்துள்ளது.

சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கொரோனா கடந்த ஓரிரு நாட்களாக பல மடங்கு உயர்ந்துள்ளது.

corono

நேற்றுவரை 309 ஆக இருந்த பாதிப்பு இன்று மேலும் 102 பேருக்கு உறுதி செய்யப்பட்டு 411 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், 
கொரோனாவுக்கு பரிசோதனை செய்யப்பட்டவர்கள்: 2,10,538 பேர்
தனிமை வார்டுகளில் உள்ளவர்கள்: 23,689
வென்டிலேட்டர்கள்: 3,396
தற்போதைய சேர்க்கை: 1,580
ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 3,684 (எதிர்மறை: 2789, நேர்மறை: 411 பேர். அதில் 7 பேர் டிஸ்சார்ஜ். செயல்பாட்டின் கீழ்: 484) என குறிப்பிட்டுள்ளார்.