அசத்தல் செய்தி: கோடை விடுமுறைக்காக தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், தென்காசிக்கு சிறப்பு இரயில்கள்.!Tambaram Tenkasi Nagarcoil Summer Special Train Weekend Days List

தென்மாவட்ட இரயில் பயணிகளின் வசதிகளை கவனத்தில் கொண்டு, சென்னை தாம்பரம் - நாகர்கோவில் மற்றும் தென்காசி - நெல்லை - தாம்பரம் இரயில் நிலையத்திற்கு வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு இரயில்கள் இயக்க தென்னக இரயில்வே ஏற்பாடுகளை செய்துள்ளன. 

சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர இரயில் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 24 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த இரயில் தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 07:30 மணியளவில் புறப்பட்டு, மறுநாள் காலையில் 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். 

அதனைப்போல, மறுமார்கத்தில் தாம்பரத்தில் வாராந்திர சிறப்பு இரயில் ஞாயிறுக்கிழமையில் இயக்கப்படும். இந்த இரயில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஜூன் 26 வரையில் இயக்கப்படும். ஞாயிறு மாலை 04:15 மணிக்கு புறப்படும் இரயில், அதிகாலை 04:10 மணியளவில் தாம்பரத்திற்கு வந்துசேரும்.

தாம்பரம் - நாகர்கோவில் வார இருத்திவிடுமுறை சிறப்பு இரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் இரயில் நிலையத்தில் பயணத்தின் போது நின்று செல்லும். 

Tambaram

சென்னை தாம்பரம் - திருநெல்வேலி - தென்காசி வழித்தடத்தில் மார்ச் 17 ஆம் தேதி முதல் ஜூன் 26 ஆம் தேதி வரையில் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் ஞாயிறில் இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புரட்டு, மறுநாள் காலையில் 09:20 க்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்கத்தில் மார்ச் 18 ஆம் தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை செவ்வாய்கிழமை இரவு தாம்பரத்தில் 10:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலையில் 05:30 மணிக்கு மதுரை, 10:35 க்கு திருநெல்வேலி சென்றடையும்.

தாம்பரம் - திருநெல்வேலி - தென்காசி இரயில் தனது வழித்தடத்தில் உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, சேரன்மாதேவி இரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த அறிவிப்பை தென்னக இரயில்வே தெரிவித்துள்ளது.