சத்துணவு அமைப்பாளருடன் ஏற்பட்ட கள்ளக்காதல்! இறுதியில் நேர்ந்த கொடூரம்!

suicide for illegal affairs


suicide for illegal affairs


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கலையரசி சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்த வடிவேல் என்ற கூலித்தொழிலாளிக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கலையரசிக்கும், வடிவேலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

illegal affairs

இந்த விஷயம் ஜெயக்குமாருக்கு தெரியவந்ததால் கலையரசியை கண்டித்துள்ளார். ஆனால் கலையரசி வடிவேலுவுடனான கள்ளத் தொடர்பை விடாமல் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் கலையரசியை ஜெயகுமார் விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊரை விட்டு சென்ற வடிவேலுவும், கலையரசியும் நேற்று மாலை ECR சாலை அருகில் உள்ள வயலில் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது வடிவேலு இறந்து விட்டதும், கலையரசி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கலையரசியை  மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.