தமிழகம் வீடியோ

அதிமுக பேனரால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ.! மனதை கொந்தளிக்கவைத்த துயரமான சிசிடிவி காட்சி!! இதோ..

Summary:

subasree dead cctv video leaked

சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. 23 வயதே நிறைந்த  இவர் அவரது பெற்றோர்களுக்கு ஒரே மகள் ஆவார்.  பி.டெக் படிப்பை முடித்த இவர் கனடா செல்வதற்காக தேர்வுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது பள்ளிக்கரணை பகுதியில் சாலையில் உள்ள மீடியன் பகுதியில் அதிமுக நிர்வாகி ஒருவர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சுபஸ்ரீ அந்த வழியாகத் வந்தபோது, பேனர் ஒன்று சரிந்து அவர் மீது விழுந்துள்ளது.

இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.  இதனை தொடர்ந்து லாரியை ஓட்டிவந்த மனோஜ் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் பேனர் அடித்த அச்சத்திற்கு சீல் அவைக்கப்பட்டுள்ளது. ஆனால் பேனர் வைத்த அரசியல் கட்சியினர் யாரும் கைதுசெய்யப்படவில்லை. 

இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில், சுபஸ்ரீ விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.


 


Advertisement