தொடரும் துயரம்.! நீட் பயத்தால் மாணவி தற்கொலை.! இதற்க்கு ஒரு முடிவே இல்லையா!!

தொடரும் துயரம்.! நீட் பயத்தால் மாணவி தற்கொலை.! இதற்க்கு ஒரு முடிவே இல்லையா!!


student suicide for neet fear

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவ சேர்க்கைகான நீட் தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கனிமொழி நீட் தேர்வு எழுதிய நிலையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு எழுதிய தினம் முதல் மாணவி கனிமொழி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற மன உளைச்சலில் இருந்த மாணவி கனிமொழி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழி 10ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்தார். அது போல் 12 ஆம் வகுப்பில் 600-க்கு 562.28 மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.