74 வயதில் நடிகர் பாண்டு கொரோனாவால் மரணம்!! ஸ்டாலின், ஓபிஎஸ் மற்றும் திரைபிரபலங்கள் இரங்கல்

74 வயதில் நடிகர் பாண்டு கொரோனாவால் மரணம்!! ஸ்டாலின், ஓபிஎஸ் மற்றும் திரைபிரபலங்கள் இரங்கல்


stalind-and-ops-condolence-for-actor-pandu-death

நடிகர் பாண்டுவின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான பாண்டு அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்தார். 74 வயதாகும் பாண்டு அவர்களின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

பாண்டு அவர்களின் மறைவை ஒட்டி திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல், "கழகத்தின் கொடி, சின்னத்தினை வடிவமைத்துக் கொடுத்தவரும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும் சிறந்த ஓவியருமான திரு.பாண்டு அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! " என ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.