ஸ்டாலின் என்னும் நான்!! நாள், நேரம் எல்லாம் குறிச்சாச்சு!! மே 7 காலை 9 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்



Stalin takes charge of cm on friday at 9

நாளை மறுநாள் காலை 9 மணிக்கு தமிழக முதல்வராக பதவியேற்கிறார் திமுக தலைவர் முக. ஸ்டாலின்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் 159 இடங்களில் வெற்றிபெற்றது.  திமுக மட்டுமே தனித்து 125 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க உள்ளது.

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (மே 5) காலை 10.30 மணிக்கு சந்தித்த மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனை அடுத்து தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் சற்றுமுன் திமுக தலைவர் ஸ்டாலினை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதையடுத்து பதவியேற்பு விழாவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் (07-05-2021) காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்க உள்ளார்.

stalin