கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா; 3500 தமிழர்களுக்கு இலங்கை அரசு அனுமதி..!
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா; 3500 தமிழர்களுக்கு இலங்கை அரசு அனுமதி..!

இலங்கையின் வசம் உள்ள கச்சத்தீவில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புனித அந்தோனியார் சர்ச் திருவிழாவில் தமிழர்களுக்கு இலங்கை அரசால் அனுமதி வழங்கப்படுவதன் பேரில் தமிழர்கள் அங்கு சென்று வருவார்கள்.
நடப்பு ஆண்டில் புனித அந்தோனியார் திருவிழா மார்ச் மாதம் 3 & 4ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், மேற்படி 3500 தமிழர்கள் கச்சத்தீவு வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து 3500 பேர் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்று வர கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை போல, இலங்கையை சேர்ந்தோர் 4500 பேரும் கலந்துகொள்ள அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.