தமிழகம்

மனுஷன் பாவங்க!! 2 புள்ளைய பெத்து!! அதில் ஒரு புள்ள சொத்துக்காக தந்தையவே அடித்து கொன்ற கொடூரம்..

Summary:

சொத்து தகராறில் பெத்த தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் பதறவைத்துள்ளது.

சொத்து தகராறில் பெத்த தந்தையை மகனே அடித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் பதறவைத்துள்ளது.

தருமபுரி மாவட்டம் சோமனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனின் பெயர் அண்ணாமலை. கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்துவரும் அண்ணாமலை, தனது தந்தையின் பெயரில் இருக்கும் 30 செண்ட் இடத்தை தனது பெயரில் எழுதித்தரும்படி கேட்டுவந்துள்ளார்.

இதுதொடர்பாக தந்தை - மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அளவுக்கு மீறிய மதுபோதையில் வந்த அண்ணாமலை மீண்டும் தனது தந்தையிடம் நிலம் தொடர்பாக வாங்கிவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் தந்தையை அண்ணாமலை பலமாக தாக்கிய நிலையில், அய்யாச்சாமி சரிந்துவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை உயிரிழந்தநிலையில் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் அண்ணாமலையை போலீசார் தேடி வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த தந்தையை பெத்த மகனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement