மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
தமிழகமே கண்ணீர் குமுறல்.. தொடரும் தற்கொலைகள்..! இன்று சிவகங்கை மாணவர் மரணித்த சோகம்..!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அடுத்த சாக்கோட்டையை சேர்ந்தவர் சுடர்ராஜ். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற நிலையில், 12 வயது படிக்கும் அவரது இளையமகன் செல்வகுமார் மட்டும் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு உணவு அளிப்பதற்காக அவரது சித்தப்பா இன்று சென்ற போது, நீண்ட நேரம் கதவை தட்டியும் செல்வகுமார் கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதனால் உடனடியாக உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
பின் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.
அப்போது தனக்கு சரியாக படிப்பு வராததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று மாணவன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது என்றும், தற்கொலை எண்ணம் வந்தால் 104 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து ஆலோசனை பெறலாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும் மாணவர்கள் இது போன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இறுதியாக கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தையடுத்து தினமும் ஒரு மாணவி அல்லது ஒரு மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது அல்லது தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்கள் நடந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.