
shop owner abused young girl
தற்போது பாலியல் தொல்லைக்கு பஞ்சமில்லமல் போய்விட்டது. என்னதான் சட்டங்கள் கடுமைப்படுத்தப்பட்டாலும் பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு வாழும் சூழ்நிலை உருவாகிவிட்டது. நாள்தோறும் பாலியல் தொல்லை என்ற செய்தி வந்தவண்ணம் உள்ளது.
அந்தவகையில், சென்னை திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலையில் செல்லப்பிராணிகள் விற்கும் கடை வைத்திருப்பவர் மணிகண்டன். இவரது கடைக்கு மயிலாப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி செல்லப்பிராணிகள் வாங்குவதற்காகச் செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் 13-ம் தேதி கடைக்கு வந்த சிறுமியை மணிகண்டன் தனது கடைக்குள் வைத்து, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
அதே போல் கடந்த 30 ஆம் தேதியும் சிறுமியை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து வீட்டிற்குச் சென்ற சிறுமி செல்லப்பிராணிகள் விற்கும் கடை உரிமையாளர் தன்னிடம் செய்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு பதறிப்போன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் கொலை மிரட்டல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement