நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருப்பூரில் அதிர்ச்சி.. வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..!

திருப்பூர், காங்கயம் அருகே அர்த்தனாரி பாளையம் கிராமத்தில் தங்கவேல் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் டூவீலர் விற்பனை மற்றும் மெக்கானிக் ஒர்க் ஷாப் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று தங்கவேலுவின் மனைவி வேலையாக வெளியே சென்றுள்ளார். இதனால் தங்கவேல் ஒர்க் ஷாப்பிற்கு செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தங்கவேலுவின் மனைவி மாலை வேலை முடித்து தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கபபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதன் பின் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் அதில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 12 சவரன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காங்கயம் காவல் துறையினருக்கு இந்த திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவினை உடைத்து நகைகள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.