"பதவி வேண்டுமா? வாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" - தவெக நிர்வாகிக்கு எதிராக பெண் பகீர் புகார்.! 



Sexual Harassment Allegation Against TVK Functionary in Thoothukudi; Woman Claims Party Post Was Offered in Exchange for ‘Adjusting’

ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக ராணிப்பேட்டையை தொடர்ந்து தூத்துக்குடியில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. 

தவெக நிர்வாகி: 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியில் வசித்து வரும் இளம்பெண், தவெகவில் நிர்வாகியாக இருக்கிறார். இவர் நேற்று மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து புகார் அளித்தார். இந்த புகார் மனுவில், "கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, நான் தவெக நிர்வாகியாக பணியாற்றினேன். அப்போது, ஆறுமுகநேரி நகர தவெக செயலாளர் நிவாஸ்கண்ணன், கட்சியில் பொறுப்பு வாங்கி தருகிறேன் என என்னை அணுகினார். 

இதையும் படிங்க: டூவீலரில் பின்தொடர்ந்து தினமும் இதே வேலை.. ஊரே கூடி செய்த வேலை.. சிக்கிய காமுகன்.! 

ஆபாச பேச்சு: 

பின் என்னிடம் நல்ல விதமாக பேசி செல்போன் நம்பரை பெற்றுக்கொண்டவர், பின்னாளில் இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வார்த்தைகளாக பேசத்தொடங்கினார். மேலும், பெரிய பொறுப்பு வேண்டும் என்றால், சிலரிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என்றும் கூறினார். இந்த விஷயம் குறித்து தவெக தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டரிடம் புகார் தெரிவித்து இருந்தேன். 

Sexual Harassment

தொந்தரவு: 

இதனிடையே, மணப்பாடு பகுதியில் வசித்து வரும் தவெக பிரமுகர் ரூஸ்வெல்ட், என்னை போனில் தொடர்புகொண்டு நாங்கள் அழைக்கும் இடத்திற்கு வந்து எங்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அப்படியானால் மட்டுமே கட்சியில் பொறுப்பு கிடைக்கும் என்று கூறினார். இரவு நேரத்தில் வாட்சப் காலில் வரச்சொல்லி தொந்தரவு செய்து வருகிறார். 

ஆபாச படம்: 

மேலும், வாட்சப்பில் ஆபாச படங்கள், வீடியோ அனுப்பி தொல்லை கொடுக்கிறார். இவர்கள் குறித்து முதல்வர், அமைச்சர்களிடம் புகார் கொடுப்பேன் என கூறியதற்கு, வெவ்வேறு நிர்வாகிகளிடம் செல்போன் நம்பரை கொடுத்து மிரட்டல் விடுக்கிறார். அவர்களிடம் பிரச்சனை செய்யாமல் ஒதுங்க வேண்டும் என்றும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். 

Sexual Harassment

கூலிப்படை: 

கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கூலிப்படை ஏவி செல்போனையும் பறித்துக்கொண்டார். இதுதொடர்பாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அமைச்சர் வரை புகார் சென்றும் பலனில்லை. எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவர்கள் பறித்துச் சென்ற எனது செல்போனில் இவர்கள் கொடுத்த பாலியல் தொல்லை தொடர்பான ஆதாரம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்ளூர் தவெக நிர்வாகிக்கு எதிராக பாலியல் தொல்லை குறித்த புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தூத்துக்குடியில் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: பள்ளியில் வைத்து ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. 7 வயது சிறுமி கூறிய தகவல்.. போர்க்கொடி தூக்கிய உறவினர்கள்.!