பள்ளியில் வைத்து ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. 7 வயது சிறுமி கூறிய தகவல்.. போர்க்கொடி தூக்கிய உறவினர்கள்.!
7 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த 24 வயது ஆசிரியர் கைதாகி இருக்கிறார்.
இரண்டாம் வகுப்பு சிறுமி:
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, சாத்திப்பட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7 வயதுடைய சிறுமி இரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஆபாச வார்த்தைகளுடன் 15 வயது சிறுமிக்கு காதல் தொல்லை.. 48 வயது ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!

போராட்டம்:
இந்த பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் அகஸ்டின் (வயது 24). இவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கு முன்பு திரண்டு ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

போக்ஸோவில் கைது:
பின் இதுகுறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் காவல்துறையினர், விசாரணை நடத்தி ஆசிரியர் அகஸ்டினை கைது செய்து பண்ரூட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அகஸ்டின் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போதை ஊசி செலுத்திய இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. கேடுகெட்ட பழக்கம் உயிர்பறித்த துயரம்.!