70 வயது முதியவரால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; கருவை கலைக்க நீதிமன்றம் மறுப்பு.!

70 வயது முதியவரால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; கருவை கலைக்க நீதிமன்றம் மறுப்பு.!



sex tourcher 12 yers girl dindukkal

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளி ஒருவரின் மகள் (12 )எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 70 வயது முதியவர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அம்முதியவர் போக்ஸோ  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி வழக்கம்போல் பள்ளி சென்று வந்துள்ளார். திடீரென்று அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது இதனால் கடந்த அக்டோபர் 31 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 20 வாரங்களை கடந்து கருவை கலைக்க முடியாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர். 

tamilspark

இதனால் அச்சிறுமியின் பெற்றோர் நவம்பர் 23ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்து பிறகு நீதிபதிகள் ஆர் சுப்பையா, பி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்விற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிமன்ற அமர்வின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ அறிக்கையை டிசம்பர் 11ஆம் தேதி அரசு மருத்துவமனை டீன் தாக்கல் செய்தார். அதில், கரு 30 வாரங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் கருக்கலைப்பு செய்தால் சிறுமியின் உயிருக்கே ஆபத்து நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 12 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்க மறுத்து உத்தரவிட்டது. 

மேலும் சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்த பின், அதனை வளர்க்கும் சூழலில் தாய் இல்லாததால், குழந்தையை தத்து கொடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.