விபத்தில் காயமடைந்த விவசாயிக்கு தையல் போடும் துப்புரவுப் பணியாளர்! அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு அவலம்!

விபத்தில் காயமடைந்த விவசாயிக்கு தையல் போடும் துப்புரவுப் பணியாளர்! அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு அவலம்!


Sewing Cleaner for Farmer

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தீபன். விவசாயியான இவர், கடந்த திங்கள் கிழமை இருச்சக்கரவாகனத்தில் கீரமங்கலத்திலிருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கீரமங்கலம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை செவிலியர்கள் இருக்கும்நிலையில், துப்புரவு பணியாளர் ஒருவர் கார்த்தீபனுக்கு தையல் போட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவியது. 

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில், ஆட்கள் பற்றாக்குறையால் இதுபோன்று தையல் போடப்படுவதாக கூறினாலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறந்தாங்கி அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதனையடுத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில், கார்த்தீபனுக்கு தையல் போட்ட துப்புரவு பணியாளர் கோவிந்தராஜன், மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் நடந்த நேரத்தில், பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.