அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க…! பொதுமக்கள் காலில் விழுந்து கோரிக்கை.!

அதிமுகவுக்கு ஓட்டு போடாதீங்க…! பொதுமக்கள் காலில் விழுந்து கோரிக்கை.!


seermarabinar request agains ADMK

சமீபத்தில், வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 10.5% உள் இட ஒதுக்கீடு வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் வன்னியர் சமுதாய மக்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 10.5% உள் இட ஒதுக்கீடு அறிவித்தது தமிழக அரசு. 

இந்த அறிவிப்பிற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த இட ஒதுக்கீட்டு சட்டம் தற்காலிகமானது என்றும், ஆறு மாதங்களுக்கு பின், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திய பின் தேவைப்பட்டால் மாற்றியமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தங்களுக்கு டிஎன்டி பழங்குடியினர் என சான்றிதழ் வழங்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்றிட வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். மேலும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயகுமார் ஆகியோரிடம் நேரில் சென்று மனுக்களையும் அளித்தனர். 

ஆனால், அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள், சமூக நலச்சங்கங்கள் சார்பில் அரசைக் கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் கம்பம், உ.அம்மாபட்டி, சின்னமனூர் பகுதிகளில் இச்சங்கத்தினர், கருப்புக்கொடி ஏந்தி ஒவ்வொரு வீடாகச் சென்று தங்களது சமுதாயத்தினர் காலில் விழுந்து அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி வருகின்றனர்.