அரசியல் தமிழகம்

ஆகா.. சூப்பர்.! அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு வேலை.! அதிரடி காட்டிய சீமான்.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்த

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளும்  தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

அதன் படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், தனது தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டார். திருவொற்றியூர் தேரடி, பர்மா காலனி, தல்லா குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் முன்பு பேசிய சீமான், உங்களை நம்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவசக் கல்வியை அளிப்போம். 

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் வகையில் உத்தரவாதத்தை கொடுப்போம் என தெரிவித்தார். இலவசங்களையம் கவர்ச்சித் திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற தயாராக இல்லை. இலவசங்களை மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாழ்வை உயர்த்த முயற்சி செய்வோம் என்று சீமான் கூறினார்.


Advertisement