தமிழகம் சினிமா

நடிகர் தல அஜித்தை பாராட்டி தள்ளிய சீமான்.! என்ன காரணம் தெரியுமா.?

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்ட

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். தல அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், ஏரோ மாடலிங் என பல்வேறு திறமைகளை கொண்டு விளங்குகிறார். 

தல அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ரைபிள் கிளப்பில் தீவிர துப்பாக்கி பயிற்சி எடுத்து வந்த நடிகர் அஜித் மாநில அளவிலான 46 வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் தல அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெறிக்கவிட்டு அவரை கொண்டாடி வருகின்றனர்.

மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்குமாருக்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி அஜீத் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல் , இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத்திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது. இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜீத் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Advertisement