முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட்...! ஆகஸ்ட் 5 இல் தவெக நிதிநிலை அறிக்கை... என்னென்ன ஸ்பெஷல்? உச்சக்கட்ட எதிர்பார்பில்...!!!



tamil-nadu-budget-2026-welfare-announcements-expected

தமிழகத்தின் புதிய அரசின் முதல் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'அறம், பொருள், இன்பம்' என்ற முப்பால் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இந்த பட்ஜெட்டில் மக்கள் நலன், கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நலத் திட்டங்களுக்கு முக்கிய இடம்

2026-27 நிதிநிலை அறிக்கையில் முதியோர் உதவித்தொகையை உயர்த்துவது, பாரம்பரிய விளையாட்டுகளுக்குத் தனி நிதி ஒதுக்குவது, அரசுப் பள்ளிகளை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்துவது மற்றும் காமராஜர் பெயரில் சிறப்புப் பள்ளிகளை அமைப்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கசிந்தது தவெக வின் தேர்தல் அறிக்கை! ஃப்ரீ பஸ் முதல் ₹10 லட்சம் காப்பீடு வரை! மகளிர் உரிமைத்தொகை எவ்வளவு தெரியுமா? விஜய்யின் அதிரடி லிஸ்ட்!!!

பெண்கள் முன்னேற்றம் மற்றும் வீட்டு வசதி திட்டங்கள்

பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் தொழிற்பேட்டைகள் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடற்ற ஏழை மக்களுக்காக 5 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தருவது, மொழிப்போர் தியாகிகளுக்கான அருங்காட்சியகம் அமைப்பது மற்றும் மனைப் பட்டாக்களை முறைப்படுத்துவது போன்ற திட்டங்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதி ஒழுங்குக்கு முன்னுரிமை

மாநிலத்தின் தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு, தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து முன்னுரிமை திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்பாட்டுக்குரிய திட்டங்களுக்கே செலவிடப்படும் வகையில் பொறுப்பான நிதி மேலாண்மையை பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த அறிவிப்புகள் அனைத்தும் தமிழக பட்ஜெட் 2026 தாக்கலின்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: இந்த லிஸ்ட்டுக்குள் இருந்தால் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை ரூ.2500...! யாருக்கெல்லாம் கிடையாது? முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.!!!