பாலிவுட்டில் எண்ட்ரியா?? ஓபனாக நடிகர் சூர்யா சொன்ன பதில்.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
படிகட்டில் தொங்காதீங்கப்பா... உங்க உயிருக்கு தான் ஆபத்து...! பேருந்து ஓட்டுநரின் கன்னத்தில் பளார்.. பளார்.. என அறைந்த பள்ளி மாணவன்..!
சென்னையில் ஓடும் மாநகர பேருந்துகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிகட்டில் தொங்கியபடியும், ஜன்னல்களைப் பிடித்து தொங்கியபடியும், பேருந்து கூரை மேல் ஏறியும் பயணம் செய்கின்றனர். இதனால், ஏராளமான விபத்துகள் நடைபெறுகிறது. பேருந்தில் கூட்டம் இல்லாதபோதிலும் மாணவர்கள் படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பேருந்து உள்ளே வரும்படி ஓட்டுநர், நடத்துனர் கூறினாலும் மாணவர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்தநிலையில், சென்னை மதுரவாயிலை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் காளிதாஸ். இவர் கொட்டூரில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர அரசு பேருந்தை ஓட்டி சென்ற போது தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் படிகட்டில் தொங்கியும் பேருந்தின் மேல் ஏறியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் காளிதாஸ் போக்குவரத்து போலீசாரிடம் முறையிட்டுள்ளார். பின்னர் அட்டகாசம் செய்த மாணவர்களை போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதனையடுத்து மீண்டும் அந்த பேருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக வந்த போது 4 மாணவர்கள் ஓடி வந்து ஏறினர். இதில் மாணவர் தினேஷ் என்பவர் ஓட்டுநர் காளிதாஸின் கன்னத்தில் இரு முறை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் 4 பேரும் தப்பினர். இதனையடுத்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தினேஷை கைது செய்தனர். மேலும், அட்டகாசத்தில் ஈடுபட்ட 3 நபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.