சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பரிதாபமாக உரிழந்த பள்ளி மாணவன்!

school student died in metro station


school student died in metro station

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து திடீரென பள்ளி மாணவன் ஒருவன் விழுந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீவந்த் அருண் என்ற மாணவன் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். 

metri train

அப்போது சக பயணிகள் பலரும் நின்றுகொண்டிருந்த நிலையில், ஸ்ரீவந்த் அருண் முதலாவது நடைமேடையில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஸ்ரீவந்த் அருணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ஆனால்  ஸ்ரீவந்த் அருண் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.