அக்கா தூக்கில் தொங்குவதை பார்த்து அலறி துடித்த தம்பி. கடைசியில் நடந்த பரிதாபம்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கருணாகரன் - பூரண செல்வி தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் ஐஸ்வர்யா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஐஸ்வர்யா அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெரும் தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா பள்ளிக்கு 2 நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் மாணவியை கண்டிக்க நினைத்த அந்த பள்ளியின் கணினி ஆசிரியர் ஞானப்பிரகாசம் என்பவர் மாணவியை திட்டியதோடு அனைவர் முன்பும் தோப்புக்கரணம் போடுமாறு கூறியுள்ளார்.
இதனால் மனஉளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலையே இருந்துள்ளார். பள்ளியில் நடந்த சிறப்பு தேர்வுக்கும் செல்லாமல் ஐஸ்வர்யா வீட்டில் இருந்ததால் பெற்றோர் அவரிடம் விசாரித்ததில் தனக்கு பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.
இதனை அடுத்து பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யாவின் தம்பி அக்காவின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ஐஸ்வர்யாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளன்னர். ஆனால், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கதறி அழுதனர். இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளார் போலீசார் விசாரணை நடத்திவளர்கின்றனர்.