தமிழகம்

11-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி.!

Summary:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ம

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது. இருந்தபோதிலும், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு மாணவியை ட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்ற 24 வயது நிரம்பிய இளைஞர் வீடுகளுக்கு சென்று உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர், ஈரோட்டை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியிடம் பழகி, ஆசை வார்த்தை கூறி கடந்த 14-ந்தேதி சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் மணிமாறனையும், சிறுமியையும் தேடி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு ரயில் நிலையம் அருகே சிறுமியுடன் சுற்றித்திரிந்த மணிமாறனை, போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை மணிமாறன் ரயில் மூலம் சேலம் மாவட்டத்திற்கு கடத்தி சென்று, அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து திருமணம் செய்து, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிமாறனை கைது செய்தனர்.


Advertisement