தமிழகம் Covid-19

அந்த மனசுதான் சார் கடவுள்.! பசியில் வாடியோர்களுக்கு தேடிச்சென்று உணவளிக்கும் ஆலங்குடி "நட்பு உதவிக்குழு".!

Summary:

ஆலங்குடி பகுதியில் பசியில் வாடும் பலருக்கு மதிய உணவை தொடர்ந்து வழங்கி வரும் நட்பு உதவிக்குழு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், "நட்பு உதவிக்குழு" என்ற குழுவை ஆரம்பித்து கடந்த 5 நாட்களாக சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் ஆதரவற்றோர் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக ஆலங்குடி பகுதியில் பசியில் வாடும் பலருக்கு மதிய உணவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

மேலும், தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கும் தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர் ஆலங்குடி நட்பு உதவி குழுவினர். இந்த குழுவை சேர்ந்த நண்பர்கள் பலர் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் பணிபுரிந்து வரும்நிலையில், அவர்களும் இந்த குழுவிற்கு நிதி உதவி செய்கின்றனர்.

இதுகுறித்து நட்பு உதவி குழுவினர் கூறுகையில், இந்த ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்துவருகிறோம் என தெரிவித்துள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலில் தங்களது கஷ்டங்களை கண்டு கொள்ளாமல் பொதுமக்களுக்காக நட்பு உதவி குழுவினர் செய்யும் உதவி தமிழக மக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இவர்கள் செய்யும் உதவியை பார்த்து தன்னார்வலர்களும் உதவி செய்ய முன் வருகின்றனர். கஜா புயலின்போதும் இந்த நட்பு உதவி குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேடிச்சென்று உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement