அனைவருக்கும் இலவச மின்சாரம்!.. முதற்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்க திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!

அனைவருக்கும் இலவச மின்சாரம்!.. முதற்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு வழங்க திட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி..!


Scheme to provide free electricity connection to farmers

வருகின்ற 11-ஆம் தேதி 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதற்கு 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கரூரில் வருகிற 11-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- 

இலவச மின்சாரத்திற்காக பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. சட்டபேரவையில வெளியிட்ட அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. நான்கு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ளனர். 

முதல் ஆண்டில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் வேலைகள் அரவகுறிச்சியில் இருக்கும் தடாகம் பகுதியில் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார். 

மேலும் கரூரில் நடக்கும் நிகழ்ச்சியில் நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளது. இலவச மின்சாரத்திற்காக பதிவு செய்யப்பட்டு காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் படிப்படியாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.