தி ராஜா சாப்.. நடிகர் பிரபாஸுக்கு தாத்தாவாகும் பிரபல முன்னணி ஸ்டார்.! வேற லெவல் லுக்கில் வைரலாகும் போஸ்டர்!!



the-rajasaap-movie-sanjay-dutt-poster-released

திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து பான் இந்தியா ஹீரோவாக வலம் வருபவர் பிரபாஸ். அவர் தற்போது கல்கி2898 ஏடி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் தி ராஜா சாப். ஹாரர் காமெடி படமாக உருவாகும் இதனை மாருதி இயக்கியுள்ளார். 

இப்படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.மேலும் அவர்களுடன்
போமன் இரானி, விடிவி கணேஷ், சப்தகிரி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்க, தமன் இசையமைத்துள்ளார்.


தி ராஜா சாப் திரைப்படம் டிசம்பர் 5 வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் பிரபாஸின் தாத்தாவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் சஞ்சய் தத் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் அவர் வளர்ந்த முடி மற்றும் தாடியுடன் உள்ளார். அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பாலிவுட்டில் எண்ட்ரியா?? ஓபனாக நடிகர் சூர்யா சொன்ன பதில்.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!

இதையும் படிங்க: அட.. இது வித்தியாசமா இருக்கே.! ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்னனு பார்த்தீங்களா!!