அட.. இது வித்தியாசமா இருக்கே.! ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்னனு பார்த்தீங்களா!!



character-name-for-vijay-in-jananayagan-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் அடுத்ததாக ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார்.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக பாபி டியோல் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஜன நாயகன் விஜய்

மேலும் அவர்களுடன் நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.  ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் முழுவதும் அரசியலில் ஈடுபட உள்ளார்.

vijay

இதையும் படிங்க: திடீரென 100 ஆண்டுகள் பழமையான தேவாலயம் சென்ற நடிகை நயன்தாரா! வைரல் புகைப்படங்கள்...

 

கதாபாத்திரம் பெயர்

ஆதலால் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது. அதாவது படத்தில் விஜய்க்கு அவரது கட்சி பெயரை குறிப்பிடும் வகையில் 'தளபதி வெற்றி கொண்டான்' (TVK) என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

இதையும் படிங்க: ஒல்லி குச்சி உடம்புக்காரி உசுப்பேத்துரியே.. பிரேக் அப் கொடுத்த தைரியத்தில் தங்கம் போல் மின்னும் சிவாங்கி! வைரல் புகைப்படங்கள்...