"வந்துட்டாரு விஷால்.!" ரசிகர்களுக்கு குஷியான செய்தி.! துஷாராவுடன் இணைகிறார்.!



Actor vishal new movie with dussara vijayan

தென்னிந்திய சினிமாவின் கட்டுகோப்பான நடிகர்களில் விஷால் முக்கியமானவர். கடந்த சில மாதங்களாக, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். அவருடைய மதகஜராஜா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கைகள் நடுங்கியவாறு விஷால் பேசியது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

vishal

ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த வீடியோவிற்கு பின் அவரது உடல் நலம் குறித்த பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது. இந்த நிலையில் அவர் அடுத்த படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் தேங்கியிருந்தார். மார்க் ஆண்டனி மற்றும் மதகஜராஜா திரைப்படத்திற்கு பின் வேறு எந்த படங்களும் அவருக்கு வெற்றியை தரவில்லை.

இதையும் படிங்க: இவ்வளவு கிளாமர் கூடாது..ங்க.! "சார்பட்டா பரம்பரை" 'மாரியம்மா' வின் ஹாட் க்ளிக்ஸ்.!

சினிமாவில் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்ட விஷால்,  தற்போது புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். 'ஈட்டி' பட இயக்குனரான ரவி அரசு இயக்கும் இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில், இப்படத்திற்கான பூஜை நடைபெற்றுள்ளது.  இந்த படத்தில், நடிகை துஷாரா விஜயன் ஹீரோயினாக நடிக்கிரார்.

vishal

நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஷாலின் புதிய படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி இருப்பது விஷால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் அவருக்கு கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரசிகர்களை குஷிப்படுத்துமா.? அல்லது ஏமாற்றுமா.? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!