அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
10 மாவட்டங்ளை குறி வைத்த மழை.. 5 மாவட்டங்களில் தீவிரம்.. வெளியான அறிவிப்பு.!
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோடை காலத்தில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், வெயில் இருந்த நாட்கள் மிக மிக குறைவுதான். தமிழக வானிலையை பொறுத்தவரை எப்பொழுதும் மேகமூட்டமாக தான் இருந்தது. அவ்வப்போது, ஓரிரு நாடகள் தொடர்ச்சியாக மழை கூட பெய்தது. இப்படியாக கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
இந்த நிலையில், தற்போது, மீண்டும் மழைக்கான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், "மேற்கு திசையில் ஏற்பட்டுள்ள காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் கன மற்றும் மிக கன மழை பெய்ய உள்ளது.
குறிப்பாக மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்காலிலும் வரும் ஆகஸ்ட் 3 முதல் கன மழை மற்றும் மிக கனமழை பெய்ய இருக்கிறது.
எனவே, இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. மேலும் அரியலூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்." என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இதையும் படிங்க: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த ஆய்வு மையம்.! 2 நாட்களுக்கு உஷார்.!