அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"சிவகார்த்திகேயன் இப்படிப்பட்டவரா.?" கனா பட நடிகர் வெளியிட்ட தகவல்.!
'கனா' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் தர்ஷன். தற்போது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் அனைத்து வீடுகளிலும் அவரது குரல் கேட்கிறது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில், ''ஹவுஸ் மேட்ஸ்" திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்று அந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், அவரது சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதில் தர்ஷன், " ஹவுஸ்மேட்ஸ் கதை மிகவும் சுவாரசியமானது. இது வழக்கமான ஹாரர் படங்களைப் போல இல்லை. இதன் ஐடியா ரொம்ப சூப்பர். பாக்குறவங்களுக்கு விறுவிறுப்பா போகும்னு நினைக்கிறேன். நான் ஒரு படம் பண்றேன் அப்படினா சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு தெரியாமல் இருக்காது. நானே போய் அவர்கிட்ட சொல்லிடுவேன். கதையைக் கேட்டு விட்டு, எனக்கு அவர் ஆலோசனை சொல்லுவார். இந்த படத்தோட கதையும் கேட்டுவிட்டு அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். படத்துல பல விஷயங்களை அவர் கெஸ் பண்ணி சொன்னார்.
இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் "தனம் அண்ணி"யா இது.?! வாலி படத்தில் எப்படி இருக்காங்க பாருங்க.!

படத்தோட அவுட்புட்டை பார்த்துவிட்டு பாராட்டினார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் படத்தை அவரை வழங்கச் சொல்லி கேட்டார்கள். அவரும் சந்தோஷமா ஓகே சொன்னார். பல பேருக்கு அவர் எனக்கு ஆரம்ப புள்ளி என்று மட்டும் தான் தெரியும். ஆனால், என் கேரியரில் பல இடங்களில் வழிகாட்டி, இன்னமும் என்னுடன் தொடர்கிறார். ஒரு நண்பனாக, வழிகாட்டியாக, என் குடும்பத்தில் ஒருவராக என்று எனக்கு எல்லாமே அவர்தான். அவர் இல்லை என்றால் நான் எப்படி இருந்திருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனக்கு அவர் செய்த விஷயங்கள் ரொம்ப பெருசு. அவர் என் வாழ்க்கையில் கிடைத்த வரம்." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!