குழந்தையின்மை பிரச்சனையை சரி செய்யும் ஸ்பெஷல் லட்டு.. எப்படி செய்யலாம்.!?



Special healthy laddu recipe for uterus problem

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தையின்மை பிரச்சினை என்பது மிகவும் அதிகரித்து வருகிறது. குழந்தையின்மை பிரச்சனைக்காக பலரும் பலவிதமான மருத்துவங்களை நாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல சித்த மருத்துவர் உடலில் உள்ள ஹார்மோன்களை சீராக்கி கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ஊட்டுச்சத்தான லட்டு செய்வதைப் பற்றியும் அதனை எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்பதை பற்றியும் விளக்கமாக கூறியுள்ளார்.
க்கி
பெண்கள் மாதவிடாய் முடிந்து பத்து நாட்களுக்கு இந்த லட்டு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். மாதவிடாய் முடிந்த பின்பு கருமுட்டை வெளியாகும். அந்த நேரத்தில் இந்த லட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடனடியாக கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஆண்களுக்கு விந்தனு குறைபாடு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்யும்.

Healthy

லட்டு செய்ய தேவையான பொருட்கள்
கருப்பு எள், வெந்தயம், பேரீச்சம் பழம், சோம்பு, ஏலக்காய், சூரியகாந்தி விதைகள், நெய்

இதையும் படிங்க: ஒரே மாசத்துல 5 கிலோ வரை உடல் எடையை குறைக்க இந்த தானிய கஞ்சி குடித்து பாருங்க.!?

செய்முறை
கருப்பு எள், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றை தனித்தனியாக வறுத்து ஆற வைத்து  அரைத்து எடுத்து கொள்ளவும். பேரிச்சம்பழம் மற்றும் சிறிது நெய் சேர்த்து நன்றாக அரைத்து, ஆற வைத்த கலவைகளுடன் சேர்த்து கலந்து விடவும். பின்னர் நெய்யை காய்ச்சி இந்த கலவையில் ஊற்றி லட்டு பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.

இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீர்கட்டி, கர்ப்பப்பை புண், pcod, கருமுட்டை வளர்ச்சி குறைபாடு, ஒழுங்கற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் குணமடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உங்கள் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா.? இதை ட்ரை பண்ணி பாருங்க.!?