தமிழகம்

சங்கமா? சாப்பாடா? யார் அந்த சிறுவன்? வெளியானது சிறுவனின் விவரங்கள்!.

Summary:

sangama? sappada? child details


சமூக வலைத்தளங்கள் பிரபலமானதை தொடர்ந்து சாதாரண மக்களும் பிரபலம் ஆகலாம் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறது. டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

அதேபோன்று பெரியவர்கள் முதல், சிறியவர்கள் வரை அனைவரும் பிரபலமாகும் வாய்ப்பை இந்த சமூக வலைத்தளங்கள் தருகின்றது. சாதாரண விஷயமாக கூட இருந்தாலும் மக்கள் மனதில் இடதம் பிடித்துவிட்டால் அது வைரலாகிவிடும்.

அந்தவகையில் கடந்த ஆண்டின் இறுதியில் சங்கம் முக்கியமான? சாப்பாடு முக்கியமா என்ற கேள்விக்கு சாப்பாடுதான் முக்கியம் என்று கூறி தூத்துக்குடியை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிரபலமானது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது இந்த சிறுவன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பலஉய்யங்கொட்டை பகுதியை சேர்ந்த ப்ரெடி, நிம்மி தம்பதிகளின் மகன் பிரணவ் 4 வயது நிரம்பிய சிறுவன் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்துவருகிறார். இவர் கிறுஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்காக தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளான் சிறுவன் பிரணவ்.

அங்கு பிரணவின் மாமா சிறுவனிடம் பேசும்போது பிரணவ் அவ்வாறு பேசியுள்ளான். மேலும் அந்த வீடியோ தமிழகத்தின் முதல்வரை கிண்டல் செய்யும் அளவிற்கு பிரபல நியூஸ் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது. 


Advertisement